April 29, 2024

நான் விஜய்க்கு அம்மாவா ..?? என் வயசு என்ன அவரோட வயசு என்ன ..?? நடிக்கவே முடியாது என்று ..!! ஒரே போடாக போட்ட 44 வயது நடிகை ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் முக்கிய நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜய்.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து முடித்துவிட்டார் நடிகர் விஜய் . இதைத்தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ள தளபதி 68 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் விஜய்.  ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் அப்பா,  மகன் என்று இரட்டை வேடங்களில்,

நடிகர் விஜய் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . இப்படி இருக்கும் நிலையில் விஜய்க்கு என்னால் அம்மாவாக நடிக்க முடியாது என்று ஒரே போடு போட்டு விட்டாராம் 44 வயது நடிகை ஒருவர் . அவர் வேறு யாரும் இல்லை நடிகை ஜோதிகா தான். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத,

நடிகையாக இருந்து வருகிறார் நடிகை ஜோதிகா .  ஏற்கனவே விஜய்யும் , ஜோதிகாவும் இணைந்து குஷி மற்றும் திருமலை போன்ற படங்களில் ஒன்றாக  நடித்திருந்தனர் . அதன் பிறகு பல வருடங்களுக்கு மேலாக இருவரும் எந்த ஒரு படங்களிலும் ந டிக்கவில்லை .

இப்படி இருக்கும் நிலையில் தளபதி 68 படத்தில் அப்பாவாக நடிக்கும் விஜய்க்கு மனைவியாக ஜோதிகாவை நடிக்க வைக்க கேட்டுள்ளனர் தளபதி 68 படக்குழுவினர் . ஆனால் அந்தப் படத்தில் விஜய்க்கு மகனாக நடிப்பதும் விஜய் தானாம் . அதனால் எப்படி இவ்வளவு பெரிய நடிகருக்கு ,

என்னால் அம்மாவாக நடிக்க முடியும் . அவருடைய வயது என்ன என்னுடைய வயது என்ன என்று  நிராகரித்து விட்டாராம் நடிகை ஜோதிகா.  இதனால் தற்போது நடிகை சினேகாவிட ம் தளபதி 68 படக்குழுவினர்  பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *