April 28, 2024

லியோ விஜய்யின் மகளாக நடித்த சிறுமி ..!! இந்த காமெடி நடிகரின் மகள் தானா ..?? இணையத்தை கலக்கும் குடும்ப புகைப்படங்கள் ..!!

சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் பிளாக்பஸ்டர் படமாக அமைந்துள்ளது.  இதுவரை இல்லாத அளவிற்கு இந்த படத்தில் தன்னுடைய தரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகர் விஜய்.  மேலும் இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து சஞ்சய் தத் , திரிஷா , அர்ஜுன் , கெளதம் வாசுதேவ் மேனன் , மிஸ்கின் , பிரியா ஆனந்த் ,

சாண்டி மாஸ்டர் , மடோனா செபாஸ்டின் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . அப்படி இந்த படத்தில் விஜய்க்கு மகளாக நடித்திருந்தவர் தான் இயல் அர்ஜுனன் . இவர் வேறு யாருமில்லை பிரபல காமெடி நடிகரான அர்ஜுனனின் மகள்தான் . தமிழில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி,

ஆதலால் காதல் செய்வீர் , வாயை மூடி பேசவும் , கப்பல், நெஞ்சில் துணிவிருந்தால் , டிக் டிக் டிக்  , நித்தம் ஒரு வானம் போன்ற பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்திருந்தவர் தான் நடிகர் அர்ஜுனன் . இவருக்கு திருமணமாகி ஒரு மகன் , ஒரு மகள் உள்ளனர் .

இதில் இருவர்களுமே தற்போது தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டு வருகின்றனர் . இந்நிலையில் லியோ படத்தில் நடித்திருந்த இயலின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *