April 27, 2024

இன்று என்னுடைய மகனுக்கு பிறந்தநாள்..!! சிறு வயது புகைப்படங்களை வெளியிட்டு சர்பெரைஸ் கொடுத்த விக்ரம்..!!

தமிழ் சினிமா உலகில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகர் சியான் விக்ரம்.  இவருடைய மகன் தான்  நடிகர் துருவ் விக்ரம் . கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்  நடிகர் துருவ் விக்ரம் . இப்படி வெளியான முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்ற துருவ்  விக்ரம்,

பின்னர் தன்னுடைய தந்தையான விக்ரமுடன் இணைந்து மகான் என்ற படத்தில் நடித்திருந்தார் . ஆனால் இந்த படங்களுக்குப் பிறகு இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை . இதை அடுத்து தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க உள்ள,

புதிய படத்தில் கமிட்டாகி உள்ளாராம் நடிகர் துருவ்  விக்ரம் . இதனால் இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தரும் என்று கூறப்படுகிறது . இப்படி இருக்கும் நிலையில் இன்று தன்னுடைய 26 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் நடிகர் துருவ்  விக்ரமின்,

சிறு வயது புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார் நடிகர் விக்ரம் .  இதை பார்த்த ரசிகர்கள் நம்ம துருவ் விக்ரமா இது .? சிறுவயதில் செம கியூட்டாக  இருக்கிறாரே என்று கூறி வருகின்றனர்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *