April 22, 2024

கொழு கொழுவென இருந்த ஹன்சிகா..!! இப்படி தான் உடல் எடையை குறைத்தாரா ..?? புகைப்படங்களை வெளியிட்ட ஹன்சிகா ..!!

தென்னிந்திய சினிமா உலகில் ஒரு முக்கியமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.  ஆரம்பத்தில் ஹிந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக கலக்கிக்கொண்டு வந்த ஹன்சிகா கடந்த 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.  இப்படி இவர் நடித்த முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான வேலாயுதம், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி, சித்தார்த் நடிப்பில் வெளியான தீயா வேலை செய்யணும் குமாரு ,சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் 2 ,சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான,

மான் கராத்தே போன்ற பல படங்களில் நடித்திருந்தார் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே ,

கடந்த 2022 ஆம் ஆண்டு சோஹைல் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .  மேலும் ஹன்சிகா என்று சொன்னாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது அமுல் பேபி தான் . அப்படி ஒரு காலகட்டத்தில் கொழு கொழுவென இருந்த ஹன்சிகா உடற்பயிற்சி செய்து ,

தன்னுடைய உடனடியை பாதியாக குறைத்து இருக்கிறார் . தற்போது அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார் நடிகை ஹன்சிகா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *