April 30, 2024

68 வயதிலும் கல்லு போல உடம்பை வைத்திருக்கும் கமல்ஹாசனின் ஜிம் புகைப்படங்கள் ..!!

கமல்ஹாசன் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட முன்னணி நடிகர் ஆவார் . குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய கமல்ஹாசன் இன்று இந்திய சினிமாவில் ஒரு முக்கியமான நடிகராக இருந்து வருகிறார்.  குறிப்பாக தமிழ் சினிமாவிற்கு பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து வைத்த பெருமை இவரையே சேரும் . மேலும் இவர் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர்,

தயாரிப்பாளர் ,பாடகர் ,பாடலாசிரியர் என்று  பன்முகம் கொண்டவராக இருந்து வருகிறார் . சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது . இதை அடுத்து தற்போது ஷங்கர்  இயக்கத்தில் உருவாக்கி வரும் இந்தியன் 2 படத்தில்,

பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார்.  இதைத்தொடர்ந்து தற்போது மூன்று திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார் கமல்ஹாசன்.  இப்படி பிசியான நடிகராக இருந்து வரும் கமல்ஹாசன் 68 வயதாகியும் கூட இன்னும் தன்னுடைய உடலை சரியாக பராமரித்து வருகிறார்.

அப்படி சிறு வயது முதலே உடற்பயிற்சி செய்து வரும் கமல்ஹாசன் தற்போது வரை அதை செய்து வருகிறாராம் . அதனால் தான் கமல்ஹாசன் இப்போதும் பிட்டாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது . தற்போது அவர் ஜிம்மில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *