May 6, 2024

விஜய்யை கூட பிறந்த தம்பி போல நினைத்த விஜயகாந்த் ..!! இப்போது வைரலாகும் அண்ணன் தம்பியின் புகைப்படங்கள் ..!!

கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இறந்துவிட்டார் என்பதை இப்போது கூட பலராலும் ஜீரணிக்க முடியவில்லை . அப்படி இருந்தாலும் இப்போதும் பல நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் . குறிப்பாக தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் பல பிரபலங்களை வளர்த்து விட்டவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தான் . அந்த வகையில் ஒருவர் தான் நடிகர் விஜய் .

அப்படி கேப்டன் விஜயகாந்தின் ஆரம்ப காலகட்டங்களில் அவருக்கு தொடர்ச்சியாக சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருந்தவர் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர்.  இதனால் இவர் மீது எப்போதும் கேப்டனுக்கு ஒரு தனி பிரியம் உண்டு . அந்த நேரத்தில் எஸ்ஏ சந்திரசேகர் ,

தன்னுடைய மகனான விஜய்யை ஹீரோவாக்கினார்.  ஆனால் அந்த படம் ஓடவில்லை.  இதன் பிறகு விஜய்யின் படத்தில் ஒரு பெரிய நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று விஜயகாந்திடம் கேட்டிருக்கிறார் எஸ் ஏ சந்திரசேகர் . இதைக் கேட்டதும் மறுக்காமல் ,

நடித்துக் கொடுத்திருக்கிறார் விஜயகாந்த் . அது மட்டுமல்லாமல் இந்த படத்திற்காக சம்பளம் கூட வாங்க வில்லையாம்.  இதைப்பற்றி கேட்டதற்கு தம்பி நல்லா வர வேண்டும் அவ்வளவுதான் என்று கூறிவிட்டாராம் . இதனால்தான் கேப்டன் விஜயகாந்தின் இறப்பில் முதல் ஆளாய் ,

கலந்து கொண்டார் விஜய்.  இப்படி இருக்கும் நிலையில் கேப்டன் விஜயகாந்தும், தளபதி விஜய்யும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *