April 28, 2024

என்னுடைய அப்பா சிறந்த மனிதர் இல்லை ..!! அவர் இப்படிப்பட்டவர் ..!! கமல் குறித்து வெளிப்படையாக சொல்லிய ஸ்ருதிஹாசன் ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் மூத்த முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர்தான் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள்.  சிறுவயதிலேயே தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய கமல்ஹாசன் 69 வயதாகியும் கூட சினிமாவிற்காக உழைத்துக் கொண்டு வருகிறார் . அதோடு தற்போது நான்கு படங்களுக்கு  மேல் கைவசம் வைத்திருக்கிறார் கமல்ஹாசன் . இன்னும் சொல்லப் போனால் கமல்ஹாசன் ,

தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் என்று தான் சொல்ல வேண்டும் . இப்படி சினிமாவில் கொடி கட்டி பறந்து வந்த கமல்ஹாசன் எந்த அளவிற்கு பெயர் புகழை சம்பாதித்தாரோ , அதே அளவிற்கு சர்ச்சைகளையும் , பிரச்சனைகளையும் சம்பாதித்தார் .  இதனாலேயே இவருடன்,

நடிப்பதற்கு பல நடிகைகள் தயக்கம் காட்டினார்கள். இந்நிலையில் சமீபத்தில் பெண்கள் பாதுகாப்பு தான் எனக்கு முக்கியம் என்று சொல்லி பிரதிப்பை அதிரடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றினார் கமல்ஹாசன்.  இது தற்போது இவருக்கு எதிராக திரும்பியது.

இப்படி இருக்கும் நிலையில்  சமீபத்தில் தன்னுடைய 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார் கமல்ஹாசன் . பலரும் கமலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர் . அந்த வகையில் தன்னுடைய அப்பாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ருதிஹாசன் கமலுடன் இருக்கும்,

புகைப்படத்தை பகிர்ந்து “என்னுடைய அப்பா பல தசாப்தங்களாக சிறந்த மனிதரை விட எளிமையானவர்” என்று கூறியுள்ளார் . தற்போது அவர் போட்ட பதிவு இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *