May 9, 2024

ரஜினிக்கு முன்பே ” சூப்பர் ஸ்டார் ” பட்டத்தை வைத்திருந்தது இந்த நடிகரா ..?? இத்தன நாளா இது தெரியாம போச்சே ..?? ஆதாரத்துடன் வெளிவந்த உண்மை ..!!

சமீப காலமாக சூப்பர் ஸ்டார் சர்ச்சை பெரிய அளவில் பேசப்பட்டது . விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்படுக்கிறார் என்றெல்லாம் வதந்திகள் பரவியது . இப்படி இருந்த நிலையில் ஒரே சூப்பர் ஸ்டார் அது ரஜினி சார் மட்டும்தான் என்று எல்லா சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகர் விஜய்.  ஆனால் ரஜினிக்கு முன்பே சூப்பர் ஸ்டார் பட்டத்தை வைத்திருந்தது வேறு ஒரு  நடிகர் தானாம்.

அந்த வகையில் கடந்த 1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் என்ற படத்தின்  மூலம் நடிகராக அறிமுகமானார் ரஜினிகாந்த்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.  அப்படி கடந்த 1978 ஆம் ஆண்டு வெளியான பைரவி என்ற படத்தின் மூலம்,

சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றார் ரஜினிகாந்த் . இந்த படத்தில் இருந்து தான் இவரை சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.  ஆனால் ரஜினிக்கு முன்பே சூப்பர் ஸ்டார் பட்டத்தை பயன்படுத்தியது கமல்ஹாசன் தானாம் . அந்த வகையில் கடந்த 1978 ஆம் ஆண்டு,

ரஜினி – கமல் கூட்டணியில் வெளியான திரைப்படம் தான் இளமை ஊஞ்சல் ஆடுகிறது.  அப்படி இந்தப் படத்தின் போஸ்டரில் சூப்பர் ஸ்டார் கமல்ஹாசன் என்று குறிப்பிட்டுள்ளனர்.  இதற்கும் இந்த திரைப்படமும் ரஜினியின் பைரவி திரைப்படமும் ஒரு நாள் வித்தியாசத்தில் தான்,

வெளியாகி இருந்தது.  இருந்தாலும்  சூப்பர் ஸ்டார் பட்டம் ரஜினிக்கு தான் பொருத்தமாக இருந்தது . இதன் பிறகு பட்டமே இல்லாமல் இருந்து வந்த கமல்ஹாசன் தசாவதாரம் படத்திலிருந்து உலக நாயகன் என்ற அந்தஸ்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *