April 24, 2024

அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்த விஜய் ..!! முதல் போனே சீமானுக்கு தான் ..!! அப்படி என்ன சொன்னார் தெரியுமா ..??

நடிகர் விஜய் வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடக்க உள்ள தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வ தகவலே வெளியாகி உள்ளது. அப்படி சமீபத்தில் நடந்து முடிந்த லியோ படத்தின் வெற்றி விழாவில் 2026 ல் கப்பு முக்கியம் பிகிலு என்று மறைமுகமாக சொல்லியிருந்தார் நடிகர் விஜய் .  இதனால் தன்னுடைய அரசியல் ஆட்டத்தை இப்போது ஆரம்பித்துள்ளார் நடிகர் விஜய் .

அந்த வகையில் அண்மைக்காலமாக அரசியல் தலைவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகிறாராம் நடிகர் விஜய் . அப்படி முக்கிய அரசியல் பிரமுகருக்கும் போன் செய்து வாழ்த்தியுள்ளார் விஜய் . அவர் வேறு யாரும் இல்லை நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான் தான்.

இன்று தன்னுடைய 57வது பிறந்த நாளை கொண்டாடிய சீமானுக்கு ஃபோனில் வாழ்த்து சொல்லி உள்ளார் நடிகர் விஜய்.  மேலும் ஆரம்பத்தில் இருந்தே நடிகர் விஜய் என்னுடைய தம்பி என்பது போல கூறி வருகிறார் சீமான்.  அது மட்டுமல்லாமல் தொடர்ந்து விஜய்க்கு தன்னுடைய ஆதரவை,

கொடுத்து வருகிறார் சீமான்.  இப்படி இருந்த நேரத்தில் சீமானுக்கு விஜய் வாழ்த்து சொல்லி உள்ளதால் கண்டிப்பாக இருவரும் கூட்டணி அமைப்பார்கள் என்று கூறப்படுகிறது.  மேலும் அரசியலைப் பொறுத்தவரை மற்ற கட்சிக்காரர்களை பகைத்துக் கொண்டால் அது மிகப்பெரிய,

பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதில் தெளிவாக இருக்கிறார் நடிகர் விஜய் . அதனால் தான் பாரபட்சம் பார்க்காமல் எல்லா அரசியல் தலைவர்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகிறாராம் நடிகர் விஜய்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *