April 30, 2024

சத்தமே இல்லாமல் தன்னுடைய திருமணத்தை முடித்த ” சாட்டை” பட நடிகர் ..!! நேரில் சென்று வாழ்த்திய தமிழ் பிரபலங்கள் ..!!

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை முதல் படத்தில் ரசிகர்களை கவர்ந்த பல நடிகர்களால் அடுத்தடுத்து ரசிகர்களை கவர முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும் .  அந்த வகையில் பல பேரை கூறலாம்.  அந்த வரிசையில் ஒருவர் தான் நடிகர் யுவன் என்கிற அஜ்மல் கான் . கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்குனர் அன்பழகன் இயக்கத்தில் வெளியான சாட்டை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் யுவன்.

இப்படி வெளியான இவருடைய முதல் திரைப்படமே இவரைப் பற்றித் தொட்டி எங்கும் பிரபலமாக்கியது என்று தான் சொல்ல வேண்டும் .  இதன் பிறகு பெரிய நடிகராக வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள் . ஆனால் இந்த படத்திற்கு பிறகு இவர் நடித்த கீரிப்புள்ள ,

கமரக்கட்டு , இளமி , அய்யனார் வீதி ,விளையாட்டு ஆரம்பம் ,அடுத்த சாட்டை போன்ற எந்த திரைப்படங்களுமே பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.  அதோடு பாலா இயக்க இருந்த ஒரு புதிய படத்திலும் கமிட்டாகி இருந்தார் யுவன் . ஆனால் அந்த திரைப்படமும் ,

பாதியிலேயே கைவிடப்பட்டதாம் . இதன் பிறகு சினிமாவை விட்டு விலகிய யுவன் தற்போது ஹோட்டல் தொழிலை பார்த்து வருகிறாராம். இப்படி இருக்கும் நிலையில் சத்தமே இல்லாமல் தன்னுடைய திருமணத்தை முடித்திருக்கிறார் சாட்டை பட நடிகர்.  இவருடைய திருமணத்தில்,

ஜிகே வாசன் ,சீமான், மன்சூர் அலிகான், ரியாஸ் கான் ,ஸ்ரீகாந்த் தேவா போன்ற பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருந்தார்களாம்.  இதோ அவருடைய திருமண புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *