April 30, 2024

அடுத்த படத்திற்காக “அந்நியன்” விக்ரம் போல மாறிய அஜித்தின் மச்சினன் ..!! வெளிவந்த புகைப்படங்கள் ..!!

நடிகர் அஜித்தின் மனைவியான ஷாலினியின் உடன் பிறந்த அண்ணன் தான் நடிகர் ரிச்சர்ட் ரிஷி . ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ரிச்சர்ட்  ரிஷி  கடந்த 2002 ஆம் ஆண்டு இயக்குனர் கதிர் இயக்கத்தில் வெளியான காதல் வைரஸ் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால் இந்த படம் தோல்வி படமாக அமைந்தது .  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கிரிவலம் ,நாளை ,

யுகா,  பெண் சிங்கம் , நினைத்தது யாரோ  போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகர் ரிச்சர்ட்  ரிஷி  . அதோடு இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு , மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

இப்படி இத்தனை மொழி படங்களில் நடித்தும் இவருக்கு வரவேற்பே கிடைக்கவில்லை. இதன் பிறகு கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான திரௌபதி என்ற திரைப்படம் தான் இவரை பெரிய அளவில் பிரபலமாக்கியது.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பராம பதம் விளையாட்டு ,

ருத்ர தாண்டவம் போன்ற படங்களில் நடித்திருந்தார் நடிகர் ரிச்சர்ட் ரிஷி . இப்படி இருக்கும் நிலையில் அடுத்த படத்திற்காக நிறைய முடி வளர்த்து வேற லெவலில் மாறி இருக்கிறார் நடிகர் ரிச்சர்ட் ரிஷி . அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கிக் கொண்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *