May 7, 2024

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் ..!! ஆனால், முதலில் இதை செய்யணும் ..!! விஜய்க்கு வெற்றிமாறன் சொல்லிய அறிவுரை ..!!

தற்போது நடிப்பதை தாண்டி அரசியலில் வருவதற்காக இப்போதே பல வேலைகளை செய்து வருகிறார் நடிகர் விஜய் . இதனால்தான் இவருடைய படங்களுக்கு தொடர்ந்து பிரச்சனைகள் எழுந்து வருகிறது.  குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ,  மாணவிகளை நேரில் சந்தித்து பரிசுகளையும் ஊக்க தொகையும் வழங்கி இருந்தார் நடிகர் விஜய்.

அதோடு தன்னுடைய ரசிகர்களை இப்போதே தன்னுடைய அரசியல் களத்திற்கு தயார் செய்து வருகிறார் நடிகர் விஜய் . மேலும் லியோ படத்தின் வெற்றி விழாவில் கூட அரசியல் என்று குறித்து தொகுப்பாளர் கேள்வி எழுப்பியிருந்தார் . அதற்கு நடிகர் விஜய் 2026 இல் கப்பு முக்கியம் பிகிலு,

என்று கூறியிருந்தார் . இதிலேயே தெரிகிறது இவர் அரசியலுக்கு உறுதியாக வருகிறார் என்று . இப்படி இருக்கும் நிலையில் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து இயக்குனர் வெற்றிமாறனிடம் கேள்வி எழுப்பப்பட்டது  . அதற்கு இயக்குனர் வெற்றிமாறன் கூறியதாவது,  அண்மைக்காலமாக,

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் செயல்பட்டு வருகிறார் . மேலும் அவர் அரசியலுக்கு வரட்டும் அவர் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் இங்கு அரசியலுக்கு வரலாம் . ஆனால் அரசியலுக்கு வருவதற்கு முன்பு யாராக இருந்தாலும்,

கள செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும் . இன்னும் சொல்ல போனால் அரசியல் என்பது எல்லோருக்குமே சவாலான ஒன்றுதான்.  அப்படி அதை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் உடையவர்களே அரசியலுக்கு வர விரும்புகிறார்கள் என்று கூறியிருந்தார் இயக்குனர் வெற்றி மாறன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *