April 28, 2024

என்னுடைய பலம் , பலவீனம் , எல்லாமே என்னுடைய குடும்பம் தான்..!! நெகிழ்ச்சியில் குடும்ப புகைப்படங்களை வெளியிட்ட குஷ்பூ ..!!

குஷ்பூ ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதி ஆவார்.  கடந்த 1988 ஆம் ஆண்டு  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை குஷ்பூ. பின்னர் இந்த படத்தை தொடர்ந்து வருஷம் 16 ,கிழக்கு வாசல், மைக்கேல் மதன காமராஜன் ,சின்னத்தம்பி,

ரிக்சா மாமா ,சிங்காரவேலன் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்காக ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . மேலும் நடிகை குஷ்பூ தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்,

என்பது குறிப்பிடத்தக்கது . அது மட்டுமல்லாமல் ஒரு சில சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார் குஷ்பூ . இதனிடையே கடந்த 2000ம் ஆண்டு இயக்குனர் சுந்தர்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் குஷ்பூ.  திருமணமான இவர்களுக்கு ,

இரண்டு மகள்கள் உள்ளனர்.  இப்படி இருக்கும் நிலையில்  சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வரும் குஷ்பூ தன்னுடைய குடும்ப புகைப்படங்களை பகிர்ந்து என்னுடைய பலம் ,என்னுடைய பலவீனம், என்னுடைய உலகம் எல்லாமே என்னுடைய குடும்பம் தான்,

என்று பதிவிட்டுள்ளார் . தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது. இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *