April 27, 2024

ஜெயிலரை கீழே தள்ளிய லியோ ..!! நம்பர் ஒன் இடத்தை பிடித்த விஜய் ..!! இரண்டாவது வார வசூல் இத்தனை கோடியா ..??

லியோ திரைப்படம் இரண்டு வாரங்களை கடந்தும் கூட இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது . அந்த வகையில் கடந்த 19ஆம் தேதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் படமாக அமைந்துள்ளது . குறிப்பாக இந்த திரைப்படம் முதல் நாளிலேயே 148 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது .

இதனால் ஜெயிலர் படத்தின் வசூலை கண்டிப்பாக லியோ திரைப்படம் முறியடித்து விடும் என்றும் லியோ திரைப்படம் ஆயிரம் கோடி வசூலித்து விடும் என்றும் பலரும் கூறி வந்தனர் . ஆனால் இரண்டாவது வாரத்திலேயே லியோ படத்தின் வசூல் மந்தமாகிவிட்டது. அப்படி இதுவரை,

லியோ திரைப்படம் 550 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது . இதனால் ஜெயிலர் படத்தை லியோ திரைப்படம் முறியடிக்க வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்டது . இப்படி இருக்கும் நிலையில் ஜெயிலர் படத்தை கீழே தள்ளி நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது லியோ திரைப்படம் .  ஆனால் அது,

தமிழ்நாட்டில் இல்லை , கேரளாவில் தான் . அந்த வகையில் கேரளாவில் ரிலீசான ஜெயிலர் திரைப்படம் 57.4 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம் . இதைத்தொடர்ந்து கேரளாவில் வெளியான லியோ திரைப்படம் 57.8 கோடி வசூல் செய்து ஜெயிலரை கீழே தள்ளி உள்ளதாம்.

இன்னும் சொல்லப் போனால் கேரளாவில் அதிக வசூல் செய்த திரைப்படமாக லியோ திரைப்படம் இடம் பெற்றுள்ளதாம் . அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டை தாண்டி கேரளாவில் தான் விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *