May 7, 2024

முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன்னு சொல்லிய விஜய் சேதுபதியா இது ..?? கொள்கையை மாற்றிவிட்டார் போல ..!! வைரலாகும் வீடியோ உள்ளே ..!!

தமிழ் சினிமாவிலேயே ரொம்ப பிசியாக இருக்கும் நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான் . ஆரம்பத்தில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சுந்தரபாண்டியன், பீட்சா,

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ,சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பண்ணையாரும் பத்மினியும் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் விஜய் சேதுபதி . மேலும் இவர் தற்போது வில்லன்,

கதாபாத்திரங்களிலும் கலக்கிக் கொண்டு வருகிறார் . அதோடு தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்துக் கொண்டு வருகிறார் . இந்நிலையில் விஜய் சேதுபதி திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் 96 .

இந்த படத்தில் முத்தக்காட்சி இருந்ததாம் . ஆனால் விஜய் சேதுபதி நான் முத்தக் காட்சிகள் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம்.  அன்று அப்படி சொல்லிய விஜய் சேதுபதி என்று பிரபல நடிகையுடன் முத்தக் காட்சியில் நடித்திருக்கிறார் . அந்த வகையில் வருகின்ற பொங்கல் பண்டிகையை,

முன்னிட்டு விஜய் சேதுபதி ஹிந்தி நடிகையான கத்ரினா கைஃப் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் மேரி கிறிஸ்மஸ் . இந்த படத்தில் கத்ரீனா கைஃப்புடன் முத்தக் காட்சியில் நடித்திருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.  இதோ அந்த படத்தின் டிரைலரை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *