May 6, 2024

ஷங்கருக்கே விபூதி அடித்த அனிருத் ..!! இந்தியன் 2 படத்தின் இசையும் காப்பி தானா ..?? கையும் களவுமாக மாட்டிய குட்டி தம்பி ..!! வைரலாகும் வீடியோ உள்ளே ..!!

தற்போது தமிழ் திரை உலகில் ஒரு முக்கியமான இசையமைப்பாளராக இருந்து வருபவர் அனிருத்.  குறிப்பிட்ட காலகட்டத்திலேயே தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த அனிருத் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் . அப்படி இந்தியன் 2 படத்திற்கும் இசையமைப்பாளராக இருந்து வருகிறார் அனிருத் . இந்நிலையில் இந்த படத்தில் ஷங்கருக்கே விபூதி அடித்திருக்கிறார் அனிருத்.

அந்த வகையில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் இந்தியன் 2 . இந்த படத்தில் கமலுடன் இணைந்து காஜல் அகர்வால் , சித்தார்த் , எஸ்  ஜே சூர்யா ,ரகுல் ப்ரீத்தி சிங் ,பிரியா பவானி சங்கர்,

நெடுமுடி வேணு ,விவேக் ,சமுத்திரக்கனி ,பாபி சிம்ஹா  போன்ற பல நடிகர் , நடிகைகள் நடித்துள்ளனர் . மேலும் முதல் முறையாக ஷங்கரின் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது . இந்நிலையில் நேற்று இந்தியன் 2 படத்தின் ,

அறிமுக வீடியோ இணையத்தில் வெளியானது . இவ்வளவு பிரம்மாண்டமாக எடுத்த படத்தில் அனிருத் இசை மோசமாக இருந்ததாக ரசிகர்கள் கழுவி ஊத்தி வந்தனர் . ஆனால் இந்த இசையும் ஷங்கர் படத்திலிருந்து தான் உருவி இருக்கிறார் அனிருத்.  அந்த வகையில் ஷங்கர் இயக்கத்தில்,

வெளியான ஜீன்ஸ் படத்தில் இடம்பெற்ற “கொலம்பஸ் கொலம்பஸ் ” என்ற படத்தில் இடம் பெற்ற இசையை அப்படியே இந்தியன் 2 படத்திற்கு பயன்படுத்தி ஷங்கருக்கு விபூதி அடித்து இருக்கிறார் அனிருத் . தற்போது அந்த வீடியோவை கண்டுபிடித்து நெட்டிசன்கள் வெளியிட்டுள்ளனர்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *