May 1, 2024

தீபாவளிக்கு சேலை வாங்கலையோ சேலை ..!! நடிப்பை தாண்டி சேலை பிஸ்னசிலும் இறங்கிய சமந்தா ..!! இணையத்தை கலக்கும் கலர் கலர் புகைப்படங்கள் ..!!

தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் பிரபல டாப் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சமந்தா.  கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சமந்தா.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, பத்து என்றதுக்குள்ள ,தங்க மகன் ,தெறி, இரும்புத்திரை, சீமராஜா,

சூப்பர் டீலக்ஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை சமந்தா. மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு , ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களிலும் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .  இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே ,

கடந்த 2017ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை சமந்தா . ஆனால் இவருடைய திருமண வாழ்க்கை வெறும் நான்கு வருடங்கள் மட்டுமே நீடித்தது.  இதன் பிறகு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர .  விவாகரத்தான பிறகும்,

கூட பல திரைப்படங்களில் நடித்து கலக்கிக் கொண்டு வருகிறார் நடிகை சமந்தா . மேலும் அண்மைக்காலமாக நடிகை சமந்தா நடிப்பை தாண்டி மாடலிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார்.  அந்த வகையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் சேலை பிராண்டுக்கு ,

மாடலாக மாறியிருக்கிறார்  நடிகை சமந்தா . அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .இதை பார்த்த ரசிகர்கள் தீபாவளிக்கு சேலை வாங்கலையோ சேலை என்று கூறி வருகின்றனர்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *