April 24, 2024

புது கார் வாங்கிய “பொன்னியின் செல்வன்” பூங்குழலி ..!! விலையை கேட்டா தலை சுத்துதே ..!!

ஐஸ்வர்யா லட்சுமி ஒரு பிரபலமான தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகை ஆவார் . மலையாள படத்தின் மூலம் தமிழ் திரை பயணத்தை தொடங்கிய ஐஸ்வர்யா லட்சுமி கடந்த 2019 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ஆக்சன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் ,

ஆர்யா நடிப்பில் வெளியான கேப்டன், விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . அது மட்டுமல்லாமல் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்ற ,

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி . இந்தத் திரைப்படம் இவரை தமிழ் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமாக்கியது என்று தான் சொல்ல வேண்டும் . இதை அடுத்து மீண்டும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில்,

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைப் என்ற படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி . இப்படி இருக்கும் நிலையில் விலை உயர்ந்த பிரம்மாண்ட கார் ஒன்றை வாங்கி இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி . அந்த வகையில் ரேங்க் ருவர் ,

என்ற புதிய காரை வாங்கி இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.  இதன் விலை மட்டும் 70 லட்சத்திலிருந்து ஒரு கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *