April 29, 2024

ஜெயிலர் வசூலை முறியடிக்க முடியாமல் தடுமாறும் லியோ ..!! 12 நாளில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா ..?? ஒரேடியாக மந்தமான லியோ வசூல் ..!!

கடந்த 19ஆம் தேதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் லியோ . இந்த படத்தில் பார்த்திபன் மற்றும் லியோ தாஸ் என்ற இரட்டை வேடத்தில் நடித்து அசத்திய விஜய் உடன் இணைந்து சஞ்சய்தத், அர்ஜூன், திரிஷா ,கௌதம் வாசுதேவ் மேனன் ,மிஸ்கின், மடோனா செபாஸ்டின், ஜார்ஜ் மரியன் ,மன்சூர் அலிகான் ,பிரியா ஆனந்த், பாபு ஆண்டனி,

போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரித்திருந்தார் . இப்படி வெளியான படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார் . இந்நிலையில் இப்படி வெளியான திரைப்படம் விஜய் ரசிகர்களை மட்டுமே பூர்த்தி செய்தது,

மற்ற ரசிகர்களை இந்த திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.  காரணம் என்னதான் இந்த திரைப்படம் ஹாலிவுட் படம் போல இருந்தாலும் திரைக்கதையில் கோட்டை விட்டுவிட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் . இதனால் இந்த திரைப்படம் ,

இரண்டாம் பாதியில் ரசிகர்களின் பொறுமையை சோதித்தது . அப்படி இருந்தும் கூட இந்த திரைப்படம் வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  அந்த வகையில் இந்த திரைப்படம் 12 நாட்களில் 520 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். இந்த திரைப்படம் கண்டிப்பாக ,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்கும் என்று பலரும் கூறி வந்தனர் . ஆனால் லியோ படத்தின் வசூல் மந்தமானதால் ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்க முடியாமல் தடுமாறி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *