April 28, 2024

விடாமுயற்சி பட பிரபலம் திடீர் மரணம் ..!! நல்ல நண்பனை இழந்த அஜித் ..!! சோகத்தில் விடாமுயற்சி படக்குழுவினர்கள் ..!!

தற்போது அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி . இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி ஒரு வாரமே ஆன நிலையில் இந்த படத்தின் முக்கிய பிரபலம் ஒருவர் திடீரென இறந்து விட்டாராம் .

அவர் வேறு யாரும் இல்லை கலை இயக்குனர் மிலன் தான் . கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான கலாபா காதலன் என்ற படத்தின் மூலம் கலை இயக்குனராக அறிமுகமானார் மிலன் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஓரம்போ ,வேட்டைக்காரன் ,வேலாயுதம் ,என்றென்றும் புன்னகை,

சிகரம் தோடு , ரோமியோ ஜூலியட் , சாமி 2  போன்ற பல திரைப்படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியிருந்தார் . அது மட்டுமில்லாமல் அஜித்துடன் இணைந்து பில்லா ,ஏகன் ,வீரம் ,வேதாளம்,  விவேகம் போன்ற பல திரைப்படங்களில் கலை இயக்குனராக பணியாற்றி,

இருந்தார் மிலன் . அப்போதிலிருந்து அஜித்துக்கும் , இவருக்கும் இடையே ஒரு நல்ல நட்பு இருந்து வந்துள்ளது.  இந்நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்து கொண்ட மிலன் நேற்று மாரடைப்பால் இறந்து விட்டாராம்.  அவருடைய உடலை தற்போது தமிழ்நாட்டிற்கு ,

கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்களாம் .  இதைப் பார்த்த  ரசிகர்கள் கலை இயக்குனர் மிலனுக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *