May 2, 2024

இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த லோகேஷ் கனகராஜ் ..!! சிறுவயதில் இப்படி தான் இருந்தாரா ..?? வெளியான பழைய புகைப்படம் ..!!

திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் சினிமாவில் ஜெயிக்கலாம் என்ற சொல்லுக்கு உதாரணமாக வாழ்ந்து வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.  அப்படி சாதாரண வங்கி  ஊழியராக இருந்து வந்த லோகேஷ் கனகராஜ் சினிமா மீது இருந்த ஆர்வத்தினால் வங்கி வேலையை விட்டுவிட்டு குறும்படங்களை இயக்கத் தொடங்கினார்.  அப்படி குறும்படங்களை இயக்கி கவனம் நிறுத்த லோகேஷ் கனகராஜ் ,

கடந்த 2017 ம் ஆண்டு வெளியான மாநகரம் என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து,

கார்த்தியை வைத்து கைதி , விஜய்யை வைத்து மாஸ்டர் , கமல்ஹாசனை வைத்து விக்ரம்,  மீண்டும் விஜய்யை வைத்து லியோ என்று தொடர்ச்சியாக பல வெற்றிப் படங்களை கொடுத்திருந்தார்.  இன்னும் சொல்லப்போனால் இதுவரை ஒரு தோல்வி படம் கூட கொடுக்காத,

இயக்குனர் என்ற அந்தஸ்திலும் இருந்து வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் . இதனால் இந்திய சினிமாவில் இருக்கும் பல நடிகர்கள் இவருக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.  குறிப்பாக சமீபத்தில் இவருடைய இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படம் இதுவரை,

500 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.  இப்படி இருக்கும் நிலையில் இன்று இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *