May 5, 2024

என்னோட அப்பா சங்கி கிடையாது ..!! அவர் சங்கியாக இருந்தால் இதை பண்ணிருக்க மாட்டார் ..!! மேடையிலேயே பொங்கிய சூப்பர் ஸ்டாரின் மகள் ..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா . இவர் நடிகர் தனுசை திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் . ஆனால் திருமணமாகி 18 வருடங்கள் கழித்து இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் . மேலும் ஐஸ்வர்யா கடந்த 2012 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கெளதம் கார்த்திகை வைத்து வை ராஜா வை என்ற படத்தை இயக்கியிருந்தார் . இதன் பிறகு பல வருடங்களாக எந்த படத்தையும் இயக்காமல் இருந்து வந்த ஐஸ்வர்யா பின்னர் லால் சலாம் படத்தின் மூலம் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்தார் .

இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  அதோடு இவருடன் இணைந்து விஷ்ணு விஷால், விக்ராந்த் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . லைக்கா நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

மேலும் சமீபத்தில் நடந்த அயோத்தி கும்பாபிஷேக விழாவிற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சென்று இருந்தார் . இதனால் பலரும் சூப்பர் ஸ்டாரை சங்கி என்று வறுத்தெடுத்தனர்.  இந்நிலையில் லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஐஸ்வர்யா கூறியதாவது,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சங்கி கிடையாது . என்னுடைய அப்பாவை சங்கி என்று சொல்லும்போது எனக்கு கோபம் வரும் . மேலும் ரஜினிகாந்த்  சங்கியாக இருந்தால் லால் சலாம் படத்தில் அவர் நடித்திருக்கவே மாட்டார் என்று உணர்ச்சி பொங்க பேசியிருந்தார் ஐஸ்வர்யா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *