April 29, 2024

திரு மண த்தை அறி வித்த “பிக்பா ஸ்” கவி ன் ..!! பொண் ணு யார் தெ ரி யுமா ..?? அ வசர அவச ரமா க நட க்கும் திரும ண வே லை கள் ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களில் ஒருவர் தான் நடிகர் கவின்.  ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற சீரியல் மூலம் அறிமுகமானார்  கவின் .பின்னர் இதை தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்தார் .  இதன் பிறகு படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவின் ,

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான நட்புனா என்னன்னு தெரியுமா என்ற படத்தின்  மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . ஆனால் இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தரவில்லை . இதன் பிறகு வெளியான லிப்ட் மற்றும் டாடா போன்ற திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய ,

வரவேற்பை பெற்றுத் தந்தது . இதைஅடுத்து தற்போது மூன்று திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகர் கவின் . இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது சகப் போட்டியாளரான லாஸ்லியா மீது  காதல் வயப்பட்டார் நடிகர் கவின்.

பின்னர் இந்த நிகழ்ச்சி முடிந்ததும் இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.  இப்படி இருக்கும் நிலையில் 33 வயதான நடிகர் கவினுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாம்.  அந்த வகையில் வீட்டில் பார்த்த பெண்ணையே திருமணம் செய்வதற்கு சம்மதம் தெரிவித்து,

விட்டாராம் நடிகர்  நடிகர் கவின் . அப்படி இவர்களுடைய திருமணம் வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . இதைப் பார்த்த ரசிகர்கள் நடிகர்  கவினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *