May 11, 2024

பொன்னியின் செல்வனை அடிச்சு நொறுக்கிய லியோ ..!! வெறும் ஏழு நாளில் இத்தனை கோடி வசூலா ..?? அடுத்த டார்கெட் ஜெயிலர் தான் போலையே ..??

தற்போது நடிகர் விஜய்யின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கியமான படமாக அமைந்துள்ளது லியோ திரைப்படம் . காரணம் விஜய் நடித்த படங்களிலேயே இந்த திரைப்படம் தான் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது . அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இந்த படத்தில் சஞ்சய் தத் ,அர்ஜுன், திரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின் ,பிரியா ஆனந்த்,

மன்சூர் அலிகான் , சாண்டி மாஸ்டர் ,மடோனா செப்பாஸ்டின் , பாபு ஆண்டனி , மேத்யூ தாமஸ் போன்ற பல நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார் .  கடந்த வியாழக்கிழமை வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களையே,

பெற்று வருகிறது என்று தான் சொல்ல வேண்டும் .  ஆனால் அப்படி இருந்தும் கூட இந்த திரைப்படம் வசூலில் பிரம்மாண்ட சாதனை செய்து வருகிறது . அந்த வகையில் இந்தத் திரைப்படம் வெளியாகி ஏழு நாட்களிலேயே 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

அப்படி பார்த்தால் கடந்த வருடம் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படம் மொத்தமாகவே 500 கோடி தான் வசூல் செய்திருந்தது . அந்த வசூல் சாதனையை தற்போது  ஓரங்கட்டியுள்ளது லியோ திரைப்படம் . இதனால் அடுத்த டார்கெட் ,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் என்றும் கண்டிப்பாக லியோ திரைப்படம் ஜெயிலர் படத்தின் வசூலை மிந்திவிடும் என்றும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *