April 29, 2024

விஜய் மட்டும் இதை செய்து விட்டால் ..!! என்னுடைய மீசையை எடுத்து விடுகிறேன் ..!! சவால் விட்ட காமெடி நடிகர் ..!! அவ்வளவு நம்பிக்கையா ..??

சமீப காலமாகவே  சூப்பர் ஸ்டாருக்கும் விஜய்க்கும் இடையே கடுமையான போட்டிகள் நிலவி வருகிறது . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர் . மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவான இந்த திரைப்படம் இதுவரை 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது . அடுத்ததாக விஜய் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் தான் லியோ .

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பல முன்னணி பிரபலங்களின் நடிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படம் இந்த வருடத்திற்குள் வெளியாகும் என்று கூறப்படுகிறது . இதனால் கண்டிப்பாக இந்த திரைப்படம் ஆயிரம் கோடி வசூலை தொடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அதோடு இந்த படத்தில்பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர் . இதனால் கண்டிப்பாக லியோ திரைப்படம் ஆயிரம் கோடியை தொட்டுவிடும் என்று பலரும் கூறி வருகின்றனர் . இப்படி இருக்கும் நிலையில் லியோ படம் ஜெயிலர் படத்தின் வசூலை முறியடித்து விட்டால் நான் என்னுடைய,

மீசையை எடுத்துக் கொள்கிறேன் என்று சவால் விட்டிருக்கிறார் காமெடி நடிகர் ஒருவர் . அவர் வேறு யாருமில்லை நடிகர் மீசை ராஜேந்திரன் தான்.  தமிழ் படங்களில் துணை வேடங்களிலும்,  காமெடி வேடங்களிலும் கலக்கி கொண்டு வந்த மீசை ராஜேந்திரன் சமீபத்திய பேட்டி ஒன்றில்,

கூறியதாவது , லியோ படம் கண்டிப்பாக ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்காது . இதற்கு கொஞ்சம் கூட வாய்ப்பே கிடையாது . அதையும் மீறி நடந்து விட்டால் என்னுடைய மீசையே நான் எடுத்து விடுகிறேன் என்று சவால் விட்டிருக்கிறார் நடிகர் மீசை ராஜேந்திரன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *