May 2, 2024

“பிக்பாஸ்” பிரதீப்புக்கு இப்படி ஒரு தங்கமான மனசா..?? கவினுக்காக சூப்பர் ஹிட் படத்தை விட்டுகொடுத்த நடிகர் ..!! நட்புனா இப்படி இருக்கனும் ..!!

பிரதீப் ஆண்டனி ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான அருவி என்ற படத்தில் மூலம் நடிகராக அறிமுகமானார் நடிகர் பிரதீப் ஆண்டனி.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து வாழ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் நடிகர் பிரதீப் ஆண்டனி . இதைத்தொடர்ந்து கவின் நடிப்பில் வெளியான டாடா படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ,

நடிகர் பிரதீப் ஆண்டனி . தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் நடிகர் பிரதீப் ஆண்டனி  . மேலும் ஆரம்பத்தில் இருந்தே பல சர்ச்சைகளில் சிக்கினாலும் தற்போது பிரதீப்புக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. மேலும் பிரதீப் ஆண்டனியும் ,

கவினும் உயிர் நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் . இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய நண்பனான கவினுக்கு சூப்பர் ஹிட் படத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார் பிரதீப். அந்த வகையில் சமீபத்தில் கவின் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் தான் டாடா.

இந்த திரைப்படம் கவினுக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும் . ஆனால் இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிப்பதற்கு தேர்வானது பிரதீப் தானாம்.  ஆனால் இந்த படத்தில் கவின் ஹீரோவாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று அந்த வாய்ப்பை,

கவினுக்கு விட்டுக் கொடுத்திருக்கிறார் பிரதீப் . அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார் பிரதீப் . இதை பார்த்த ரசிகர்கள் பிக் பாஸ் பிரதீப்பிற்கு இப்படி ஒரு தங்கமான மனசா..??  என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *