April 29, 2024

சூப்பர் ஸ்டாரின் டூப் இவர் தானா ..?? ரஜினிக்கு 100 கோடி சம்பளம்..!! ஆனால் டூப்புக்கு வெறும் 10 ஆயிரம் தான் சம்பளமா ..?? வைரலாகும் வீடியோ உள்ளே ..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட முன்னணி நடிகர் ஆவார்.  கிட்டத்தட்ட 48 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தில் கொடிகட்டி பறந்து வரும் சூப்பர் ஸ்டாருக்கு இப்போதும் கோடி கணக்கில் ரசிகர்கள் உள்ளனர்.  அது மட்டுமல்லாமல் 72 வயதிலும் கூட இன்னும் அதே மார்க்கெட்டுடன் கொடி கட்டி பறந்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் .

அந்த வகையில்  சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.  இதை யடுத்து அடுத்ததாக ஜெய் பீம் பட இயக்குனரான டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் தலைவர் 170 என்ற படத்தில் பிஸியாக ,

நடித்துக் கொண்டு வருகிறார் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் அவர்கள் . இப்படி இருக்கும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாதிரியே இருக்கும் ஒருவரின் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.  அப்படி அந்த வீடியோவை பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன் , கிரீன் மேட்ல நடிச்சு ,

வி எஃப் எக்ஸ்ல  சண்டை போட்டு 100, 150 கோடி வாங்குகிறார் .அவருக்கு பெயர் தலைவர் , ஆனால் ஒருத்தர் நிஜத்துல சண்டை போட்டு எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சம்பளம் 10,000 தான் . ஆனால் அவருக்கு பெயர் டூப் என்று அந்த வீடியோவை பகிர்ந்து இருந்தார் ப்ளூ சட்டை மாறன்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடம் இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என்று சொல்லும் அளவிற்கு அந்த நபர் அச்சசல் அப்படியே ரஜினிகாந்த் போலவே இருக்கிறார் . இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *