April 28, 2024

விஜ ய்க் கு ஜோ டியா கும் 28 வய து ந டி கை ..!! நய ன் தாரா , திரிஷா வுக் கே கி டை க்காத வா ய் ப்பு ..!! இ ளம் ந டிகை க்கு அடி த்த அதிர் ஷ்ட ம் ..!! பொ றாமை யில் பொ ங் கும் சக நடி கை கள் ..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் . தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ என்ற படத்தில் நடித்து முடித்து விட்டார் நடிகர் விஜய் . இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.  இதைத்தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 68 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் விஜய் . ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு,

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.  இந்நிலையில் இந்த படத்தில் யார் கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்து வந்தது.  அப்படி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்க திரிஷா ,ஜோதிகா மற்றும் ,

நயன்தாராவின் பெயர் தான் அடிக்கடி அடிபட்டது . ஆனால் தற்போது அவர்களெல்லாம் வேண்டாம் அந்த இளம் நடிகை தான் வேண்டும் என்று விஜய் கேட்டுள்ளாராம்.  அவர் வேறு யாருமில்லை நடிகை பிரியங்கா மோகன் தான் . சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் என்ற படத்தின்  மூலம் தமிழ் சினிமாவிற்கு ,

கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை பிரியங்கா மோகன்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து எதற்கும் துணிந்தவன்,  டான் , கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்திருந்தார் நடிகை பிரியங்கா மோகன்.  அதுமட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களின் கனவுகன்னியாகவும் இருந்து வருகிறார் நடிகை பிரியங்கா மோகன்.

இதை அடுத்து தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக உள்ளாராம் நடிகை பிரியங்கா மோகன் . மேலும் முன்னணி நடிகைகளுக்கே கிடைக்காத வாய்ப்பு  நடிகை பிரியங்கா மோகனுக்கு கிடைத்துள்ளதால் அவர் மீது சக நடிகைகள் பொறாமையில் உள்ளார்களாம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *