April 26, 2024

2026 ல் “அது ” முக்கியம் ..!! விஜய் சொல்லிய அந்த ஒரு வார்த்தையால் குஷியான ரசிகர்கள் ..!! அப்ப அரசியலுக்கு வருவது உறுதி தானா ..??

விஜய் ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருந்த நாள் நேற்று என்று தான் சொல்ல வேண்டும் . காரணம் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்குப் பிறகு விஜய் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் குட்டி ஸ்டோரி சொல்லவில்லை.  அதுமட்டுமில்லாமல் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடக்கவில்லை . குறிப்பாக லியோ படம் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து தான் திரையரங்குகளில் வெளியானது .

இதனால் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்து வந்தனர் . தற்போது அவர்களை குஷியாக்கும் வகையில் லியோ படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக  நடந்திருக்கிறது.  மேலும் நடிகர் விஜய் அண்மைக்காலமாக அரசியலில் நுழைவதற்காக பல்வேறு வேலைகளை,

செய்து வருகிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான் . ஆனால் இன்னும் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.  இந்நிலையில் நேற்று நடந்த வெற்றி விழாவில் குட்டி ஸ்டோரி எல்லாம் சொல்லி முடித்த விஜய் கண்டிப்பாக அரசியல் பற்றி பேசுவார் என்று,

ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தனர் . அப்போது தொகுப்பாளரும் இது குறித்து மறைமுகமாக கேட்டு இருக்கிறார் . அதற்கு எப்போதும் போல விளையாட்டாக பதிலளித்த விஜய் 2026 இல் கப்பு முக்கியம் பிகிலு என்று மட்டும் கூறியிருந்தார் . இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் ,

இந்த ஒரு வார்த்தை போதும் தளபதி அரசியலுக்கு வருவது 100% உறுதி என்று கொண்டாட்டத்தில் கூறி வருகின்றனர். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *