April 25, 2024

ஜெயிலரை தொம்சம் செய்த லியோ ..!! அடேங்கப்பா , முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா ..?? அப்ப 1000 கோடி வசூல் கன்பாரம் ..!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் நேற்று வெளியான பிரம்மாண்ட திரைப்படம் தான் லியோ . இரட்டை வேடங்களில் ரசிகர்களை கவர்ந்த விஜய்யுடன் இணைந்து சஞ்சய்தத் ,திரிஷா ,கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின் ,அர்ஜுன், பிரியா ஆனந்த், மடோனா செப்பாஸ்டின், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் . மேத்தீவ் தாமஸ் என்று பல நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர் .

எஸ் எஸ் லலித்குமார் தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு அனிருத் வெறித்தனமாக இசையமைத்திருந்தார் .  இப்படி மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவான இந்த திரைப்படம் விஜய் ரசிகர்களை மட்டுமே பூர்த்தி செய்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும் .

இவர்களைத் தவிர்த்து பல பேர் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களை மட்டுமே கொடுத்து வருகின்றனர் . இருந்தாலும் இந்த திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது . அந்த வகையில் முதல் நாளிலேயே ஜெயிலர் படத்தின் வசூலை தொம்சம் செய்துள்ளது,

லியோ திரைப்படம் . அந்த வகையில் லியோ திரைப்படம் முதல் நாளிலேயே உலக அளவில் 145 கோடி வரை வசூல் செய்து அனைவரையும் வாய்ப்பு அளக்க வைத்துள்ளது . ஆனால் ஜெயிலர் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நூறு கோடி என்பது குறிப்பிடத்தக்கது .

இப்படி முதல் நாளிலேயே 145 கோடி லியோ திரைப்படம் வசூலித்ததால் இனி வரும் நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் கண்டிப்பாக இந்த திரைப்படம் ஆயிரம் கோடி வசூலை தொட்டுவிடும் என்று இப்போதே கணிக்கப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *