April 29, 2024

உண்மையை மறைக்க பல கோடிகளை இறைக்கும் சிவகார்த்திகேயன் ..!! என்னிடம் ஆதாரமே இருக்கு ..!! எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றிய பிரபலம் ..!!

தற்போது நடிகர் சிவகார்த்திகேயனின் பஞ்சாயத்து தான் இன்னும் ஓயாமல் இருந்து வருகிறது . அந்த வகையில் சிவகார்த்திகேயனுக்கு பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இருந்தவர் தான் இசையமைப்பாளர் டி இமான்.  இதனால் இருவரும் அண்ணன் , தம்பி போல பழகி வந்தனர் . இப்படி இருந்த நிலையில் சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார் என்று டி இமான் பரபரப்பு தகவலை ,

வெளியிட்டிருந்தார் . இந்த துரோகத்தை இந்த ஜென்மத்தில் நான் மன்னிக்கவே மாட்டேன் என்றும் கூறியிருந்தார் . இதைப்பார்த்த பலரும் சிவகார்த்திகேயனா இப்படி செய்தார் என்று அதிர்ச்சியில் கூறிவருகின்றனர் . ஆனால் இது குறித்து இன்னும் வாய் திறக்காமல் இருந்து வருகிறார்,

நடிகர் சிவகார்த்திகேயன் . அது மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயனுக்கு சாதகமாக டி இமானின் மனைவி அவர் நல்லவர்,  வல்லவர் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார் . இதிலேயே இவருக்கும் அவருக்கும் என்ன உறவு உள்ளது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது என்று ,

பலரும் கூறி வருகின்றனர்.  இந்நிலையில் உண்மையை மறைப்பதற்காக சிவகார்த்திகேயன் பல கோடிகளை இறைத்து வருகிறாராம்.  அந்த வகையில் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக பேசும் யூடியூப் சேனலுக்கு பெறும் தொகை கைமாறுகிறதாம் . அதேசமயம் சிவகார்த்திகேயனுக்கு,

எதிராக பேசுபவர்களின் யூடியூப் சேனலுக்கு ஸ்ட்ரைக் கொடுக்கப்பட்டு வருகிறதாம்.  இதற்கான ஆடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது என்று வெளிப்படையாக கூறியுள்ளார் வலைபேச்சு அந்தணன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *