April 26, 2024

விடாமுயற்சி படத்தில் இவர் தான் வில்லனா ..?? கொழுந்துவிட்டு எரியபோகும் தியேட்டர் ..!! 12 வருடம் கழித்து மீண்டும் அஜித்துடன் இணைந்த நடிகர் ..!!

தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி . லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளார் . மேலும் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் கழித்து தான் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.  இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா,

ரெஜினா , ப்ரியா பவானி சங்கர் போன்ற நடிகைகள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தில் 12 வருடங்கள் கழித்து அஜித்துடன் பிரபல நடிகர் ஒருவர் இணைந்துள்ளாராம் . அவர் வேறு யாருமில்லை நடிகர் அர்ஜுன் தான் .

தமிழ் சினிமா ரசிகர்களால் ஆக்சன் கிங் என்று அழைக்கப்பட்டு வரும் அர்ஜுன் கடந்த 2011 ஆம் ஆண்டு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . இந்தப் படத்தில் இவருடைய கதாபாத்திரம்,

பெரிய அளவில் பேசப்பட்டது  என்று தான் சொல்ல வேண்டும் . இதைஅடுத்து கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து மீண்டும் அஜித்துடன் இணைந்துள்ளார் நடிகர் அர்ஜுன் . குறிப்பாக விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு வில்லனாக அர்ஜுன் நடிக்க உள்ளதாக தகவல் ,

வெளியாகி உள்ளது . தற்போது விடாமுயற்சி படத்தில் கலந்து கொள்வதற்காக அர்ஜுன் துபாய் சென்றுவிட்டாராம் . விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *