April 24, 2024

நேரு மாமா கெட்டப்பில் இருப்பது யார் தெரியுமா ..?? அட, இவரை தமிழ்நாட்டுக்கே தெரியுமே ..!! இவரா என்று ஆச்சிரியமான ரசிகர்கள் ..!!

பிரதீப் ஆண்டனி ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார்.  ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த பிரதீப் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான அருவி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான வாழ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார் பிரதீப் ஆண்டனி.

இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கவின் நடிப்பில் வெளியான டாடா படத்திலும் நடித்திருந்தார் பிரதீப் ஆண்டனி . இப்படி நடிகராக கலங்கி கொண்டு வந்த பிரதீப் ஆண்டனி,

பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆரம்பத்தில் இருந்தே  சக போட்டியாளர்களின் வெறுப்பை சம்பாரித்த பிரதீப் ஆண்டனி சமீபத்தில் ரெட் கார்டு வாங்கி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் . இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .

இன்னும் சொல்லப் போனால் பிரதீப்புக்கு தான் ரசிகர்கள் அதிக ஆதரவு கொடுத்து வந்தனர் . இதனால் தற்போது புதிய வெப் சீரியஸ் ஒன்றை இயக்கும் வாய்ப்பை விஜய் டிவி பிரதீப்புக்கு  கொடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது . இப்படி இருக்கும் நிலையில்,

சிறுவயதில் நேரு மாமா கெட்டப்பில் இருக்கும் பிரதீப் ஆண்டனியின் புகைப்படம் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது . இதோ அந்த புகைப்படத்தை நீங்கள் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *