May 11, 2024

பார்வையிலேயே ரசிகர்களை மிரட்டும் இந்த சிறுவன் யார் தெரியுமா ..?? இன்று இந்திய சினிமாவே தேடும் முரட்டு வில்லனா ..??

சினிமாவைப் பொறுத்தவரை ஒரு சில நடிகர்கள் வில்லன் கதாபாத்திரத்திற்கு 100% பொருந்துவார்கள் . அப்படி இந்திய சினிமாவில் ஒரு வில்லன் நடிகரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.  அவர்தான் நடிகர் சஞ்சய் தத்.  பிரபல ஹிந்தி பட நடிகரான சஞ்சய் தத் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.  பின்னர் கடந்த 1981 ஆம் ஆண்டு வெளியான ராக்கி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இப்படி வெளியான முதல் படத்திலேயே  பிரபலமான சஞ்சய்தத் தொடர்ந்து பல ஹிந்தி படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.  இப்படி ஹீரோவாக கலக்கி கொண்டு வந்த சஞ்சய் தத் ஒரு கட்டத்தில் வில்லனாகவும் நடிக்க தொடங்கினார் . அப்படி கடந்த ,

2022 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கேஜிஎப் 2 படத்தில் ஆதிரா என்ற முரட்டு வில்லனாக நடித்து ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் கவர்ந்திருந்தார் நடிகர் சஞ்சய் தத்.   தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தில்,

ஆண்டனி தாஸ் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகர் சஞ்சய் தத்.  இப்படி ஹிந்தி சினிமாவில் திரைப்பயணத்தை  தொடங்கிய சஞ்சய் தத் வில்லன் ஆனதிலிருந்து எல்லா மொழி பட இயக்குனர்களும் சஞ்சய் தத்துக்கு வலைவீசி வருகின்றனர் . அந்த வகையில்,

தற்போது தமிழ் ,தெலுங்கு ,பஞ்சாபி , கன்னடம் என பல திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார் நடிகர் சஞ்சய் தத் . இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத அவருடைய சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *