April 27, 2024

பகை பகை தான் ..!! விஜய் மீது வன்மத்தை கக்கும் சன் டிவி ..!! அடக்கொடுமையே, அதற்காக இப்படியா செய்வது ..?? கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள் ..!!

சமீபகாலமாக விஜய் மீது வன்மத்தை கக்கிக்கொண்டு வருகிறது சன் தொலைக்காட்சி  அந்த வகையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான சர்கார் மற்றும் பீஸ்ட்  போன்ற படங்களில் நடித்திருந்தார் நடிகர் விஜய்.  இந்த இரண்டு திரைப்படங்களுமே சன் பிக்சருக்கு நல்ல லாபத்தை பெற்று தந்தது.  இதன் பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைவதற்கு மறுத்துவிட்டாராம் நடிகர் விஜய்.

அதனால் அவரை எந்த அளவிற்கு பழி வாங்க முடியுமோ அந்த அளவிற்கு பழி  வாங்கி வருகிறதாம் சன் தொலைக்காட்சி . அப்படி சமீபத்தில் நடந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர்  இசை வெளியீட்டு விழாவில் கூட ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டும் தான் ,

அவரை யாராலும் மிஞ்ச முடியாது என்று விஜய்யை தாக்கி பேசியிருந்தார்   கலாநிதி மாறன்.  அதோடு சமீபத்தில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில்  உருவான ஜவான் படத்தின் விழா சென்னையில் நடைபெற்றது . அந்த நிகழ்ச்சியில் விஜய் குறித்து ,

புகழ்ந்து பேசி இருந்தார் இயக்குனர் அட்லீ .  குறிப்பாக ஜவான்  படம் உருவாதற்கு முக்கிய காரணமே விஜய் தான் என்றும் எனக்கு நம்பிக்கை கொடுத்ததும் என்னுடைய அண்ணன் விஜய் என்று  நெகிழ்ச்சியில் பேசியிருந்தார் இயக்குனர் அட்லீ . அப்படி இயக்குனர் அட்லீ ,

விஜய் குறித்து பேசிய காட்சிகளை எல்லாம் எடிட் செய்து நீக்கி விட்டார்களாம் சன் தொலைக்காட்சி . இதனால் விஜய் மீது அப்படி என்ன இவர்களுக்கு கோவம் என்று விஜய் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *