April 28, 2024

மாயக்குரலால் ரசிகர்களை மயக்கிய பாடகி சின்மயின் அழகிய குடும்ப புகைப்படங்கள் உள்ளே ..!!

சின்மயி ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட பின்னணி பாடகி மற்றும் பின்னணி குரல் கொடுப்பவர் ஆவார் . கடந்த 2002 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார் சின்மயி . இப்படி வெளியான முதல் படத்திலேயே சிறந்த பின்னணி பாடகிக்கான தமிழ்நாடு மாநில விருதை வென்றார் சின்மயி.

பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து பாய்ஸ், வசீகரா ,தித்திக்குதே ,சண்டக்கோழி ,குத்து, பொக்கிஷம் ,வெண்ணிலா கபடி குழு , விண்ணைத்தாண்டி வருவாயா , அயன் , எந்திரன் போன்ற பல திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்களை பாடி பிரபலமானார் சின்மயி .

இவருடைய மாயக்குரல் ரசிகர்களை மயக்கியது . அது மட்டுமல்லாமல் காஜல் அகர்வால் ,சமந்தா ,நயன்தாரா,  எமி ஜாக்சன் போன்ற பல நடிகைகளுக்கு பின்னணி குரலும் கொடுத்திருக்கிறார்  சின்மயி  . இதனிடையே பிரபல நடிகரான ராகுல் ரவீந்திரன் என்பவரை,

திருமணம் செய்து கொண்ட சின்மயிக்கு கடந்த வருடம் இரட்டை குழந்தைகள் பிறந்தது . இப்படி இருக்கும் நிலையில் பாடகி சின்மயின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தை கலக்கிக் கொண்டு வருகிறது.  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *