May 6, 2024

சிவாஜியை பெண் வேடத்தில் பார்த்துள்ளீர்களா ..?? எவ்வளவு அழகாக இருக்கிறார் பாருங்க ..!! முதல் முறையாக வெளியான அரிய புகைப்படம் ..!!

தற்போது உள்ள பல முன்னணி நடிகர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்து வருபவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.  இன்னும் சொல்லப்போனால் நடிப்பிற்கே  ஒரு இலக்கணமாக வாழ்ந்து வந்தவர் என்று கூட சொல்லலாம். கடந்த  1952 ஆம் ஆண்டு வெளியான பராசக்தி என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார் சிவாஜி கணேசன் .

இப்படி வெளியான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துவிட்டார்  சிவாஜி கணேசன் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களின் நடித்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் . குறிப்பாக படத்திற்கு படம் வித்தியாசமான ,

கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் சிவாஜி கணேசன்.  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு , மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . அப்படி மொத்தமாக இவருடைய ,

திரை வாழ்க்கையில் கிட்டத்தட்ட 250 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் . மேலும் சிவாஜி கணேசன் அவர்களை எல்லா கதாபாத்திரங்களிலும் நடித்து பார்த்திருப்போம் .ஆனால் அவரை பெண் வேடத்தில் யாருமே பார்த்திருக்க மாட்டார்கள்.  முதல்முறையாக அந்த அரிய புகைப்படம்,

இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது . இதைப் பார்த்த ரசிகர்கள் நம்ம சிவாஜி கணேசன் அவர்களா இது.?  என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர் . இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *