April 28, 2024

வளர்ச்சினா இப்படி இருக்கணும் ..!! முதல் படத்திற்கு 4 லட்சம் சம்பளம் ..!! லியோ படத்திற்கு இத்தனை கோடி சம்பளமா ..?? புகழின் உச்சியில் இருக்கும் லோகேஷ் ..!!

லோகேஷ் கனகராஜ் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார்.ஆரம்பத்தில் குறும்படங்களை இயக்கி பிரபலமான லோகேஷ் கடந்த 2017 ம் ஆண்டு வெளியான  மாநகரம் என்ற படத்தின்  மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி,

விஜய்யை  வைத்து மாஸ்டர் , கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்று தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்தார்.  இதையடுத்து இரண்டாவது முறையாக விஜய் உடன் லியோ படத்தில் இணைந்துள்ளார் இயக்குனர்  லோகேஷ் கனகராஜ்.

இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன் ,மிஷ்கின், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . இந்தத் திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது . இப்படி இருக்கும் நிலையில்,

இந்த படத்திற்காக லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.  அந்த வகையில் லியோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் 30 முதல் 35 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  ஆனால் லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல்,

படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் பெறும் 4 லட்சம் தான் . அப்படி 4 லட்சத்தில் தொடங்கிய திரை வாழ்க்கை இன்று 35 கோடியில் சென்று கொண்டிருக்கிறது . இதை பார்த்த ரசிகர்கள் வளர்ச்சினா இப்படி இருக்கணும் என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *