May 2, 2024

சுந்தர் சி படங்களில் தவறாமல் நடிக்கும் ..!! விச்சு விஸ்வநாத்துக்கு ஹீரோயின் போல மகளா ..?? முதல் முறையாக வெளியான புகைப்படம் ..!!

விச்சு விஸ்வநாத் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட காமெடி நடிகர் மற்றும் துணை நடிகர் ஆவார் . கடந்த 1990 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான சந்தன காற்று என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் நடிகர் விச்சு விஸ்வநாத் .  பின்னர் இந்தப் படத்தை தொடர்ந்து தாய் மாமன் ,உள்ளத்தை அள்ளித்தா,  சுயம்வரம் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்  நடிகர் விச்சு விஸ்வநாத் .

மேலும் இவர் இயக்குனர் சுந்தர் சி யின் நெருங்கிய நண்பர் ஆவார் . இதனால் அவருடைய படங்களில் கட்டாயம் இடம் பெறுவார் நடிகர் விச்சு விஸ்வநாத் . அந்த வகையில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அருணாச்சலம் ,அன்பே சிவம்,லண்டன், நகரம், மறுபக்கம், கலகலப்பு ,

தீயா வேலை செய்யணும் குமாரு, அரண்மனை ,ஆம்பள, அரண்மனை 2 ,கலகலப்பு 2 ,அரண்மனை 3 , காபி வித் காதல் என்று தொடர்ச்சியாக அவர் இயக்கிய எல்லா படங்களில் நடித்துக் கொண்டு வந்தார் நடிகர் விச்சு விஸ்வநாத் . அது மட்டுமில்லாமல் சுந்தர் சி இயக்கும் படங்களில் ,

சுந்தர் சிக்கு அசோசியேட் டைரக்டராகவும் பணியாற்றி இருக்கிறார் நடிகர் விச்சு விஸ்வநாத்.  இதனிடையே ஹேமலதா என்பவரை திருமணம் செய்து கொண்ட விச்சு விஸ்வநாத்துக்கு ஹீரோயின் போல ஒரு மகள் இருக்கிறார்.  இவருக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாம்.

தற்போது அவருடைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இதைப் பார்த்த ரசிகர்கள் நடிகர் விச்சு விஸ்வநாத்துக்கு இப்படி ஒரு மகளா என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *