April 24, 2024

என்னங்க இவரு இப்படி இளைச்சு போயிட்டாரு..?? புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யாருன்னு தெரியுதா ..?? சுத்தமா அடையாளமே தெரியல ..??

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை படத்திற்காக எந்த அளவிற்கு தங்களுடைய உடலை வருத்தி கொள்பவர்கள் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் விக்ரம் தான்.  இவர்கள் இருவரும் தான் அடிக்கடி உடலை ஏற்றுவது இறக்குவது என்று படத்திற்காக உழைப்பார்கள் . இந்நிலையில் இவர்களைப் போலவே படத்திற்காக தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து இருக்கிறார் ஒரு நடிகர்.

அவர் வேறு யாருமில்லை மலையாள நடிகரான டோவினோ தாமஸ் தான் . மலையாள படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய நடிகர் டோவினோ தாமஸ் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் மலையாள படங்களில் நடித்து தனக்கென  ஒரு தனி இடத்தை ,

பிடித்துக் கொண்டார் . இப்படி மலையாள மொழி படங்களில் கலக்கிக்கொண்டு வந்த டோவினோ கடந்த 2018 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வில்லனாக அறிமுகமானார்.  இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை ,

பெற்று தந்தது.  குறிப்பாக சமீபத்தில் வெளியான 2018 என்ற படத்தில் இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது  என்று தான் சொல்ல வேண்டும் . இதை அடுத்து பல திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வரும் டோவினோ தாமஸ் அடுத்து நடிக்க உள்ள புதிய படத்திற்காக,

தன்னுடைய உடலை மாற்றியது மட்டுமில்லாமல் முகத்தையும் மாற்றி இருக்கிறார் . அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதைப் பார்த்த ரசிகர்கள் என்னங்க இவர் இப்படி இளைச்சு போயிட்டாரு என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *