April 28, 2024

அப்படியே கீர்த்தி சுரேஷ் போல இருக்கும் ஊர்வசியின் மகள் ..!! அடுத்த கதாநாயகி ரெடி ..!! முதல் முறையாக வெளியான புகைப்படம் ..!!

ஊர்வசி ஓர் பிரபலமான இந்திய திரைப்பட நடிகை ஆவார் . ஆரம்பத்தில் மலையாள மொழி படங்களில் கலக்கிக் கொண்டு வந்த ஊர்வசி கடந்த 1983 ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கத்தில் நடிப்பில் வெளியான முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார் நடிகை ஊர்வசி .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து அபூர்வ சகோதரிகள், பாட்டி சொல்லை தட்டாதே ,மைக்கேல் மதன காமராஜன் ,மகளிர் மட்டும் ,புள்ள குட்டிக்காரன், தாய்க்குலமே தாய்க்குலமே ,எட்டு பட்டி ராசா ,சுயம்வரம் போன்ற பல திரைப்படங்களில் நடித்து  தனக்கெனஒரு தனி இடத்தை,

பிடித்துக் கொண்டார் நடிகை ஊர்வசி .குறிப்பாக தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் நடிகை ஊர்வசி . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம்,  கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

இதனிடையே மனோஜ் கே  விஜயன் என்ற நடிகரை திருமணம் செய்து கொண்டார் ஊர்வசி.  திருமணமான இவர்களுக்கு தேஜா லட்சுமி என்ற மகள் இருக்கிறார் . ஆனால் சில வருடங்களிலேயே கணவரை விவாகரத்து செய்துவிட்டு இன்னொரு திருமணம் செய்து கொண்டார் ஊர்வசி.

இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய முதல் மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை ஊர்வசி . இதை பார்த்த ரசிகர்கள் அப்படியே கீர்த்தி சுரேஷ் போலவே இருக்கிறாரே , அடுத்த ஹீரோயின் ரெடி என்று கூறி வருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *