May 2, 2024

திரும்பவும் முதலில் இருந்தா..?? மீண்டும் வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 ..!! வெளியான ப்ரோமோவை பார்த்து கதறும் ரசிகர்கள் ..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த முக்கிய சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் . கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து தொடங்கப்பட்ட இந்த சீரியலில் ஸ்டாலின் முத்து,  சுஜிதா ,வெங்கட், ஹேமா ,குமரன், சரவண விக்ரம் , வி ஜே தீபிகா  போன்ற பல பிரபலங்கள் நடித்து வந்தனர் .  அண்ணன் தம்பி பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பான,

இந்த சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும் .  இப்படி விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஒரு கட்டத்தில் டிஆர்பி யின் தங்கியது . இதனால் ஒரு வழியாக இந்த சீரியலை முடித்து விட்டார்கள் .

அந்த சீரியலின் கடைசி நாள் புகைப்படம் கூட இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது .  இப்படி இருக்கும் நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 விரைவில் தொடங்க உள்ளதாம்.  அந்த வகையில் முதல் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஸ்டாலின் முத்துவை,

தவிர வேறு யாருமே இரண்டாம் பாகத்தில் இல்லையாம் . இந்த சீரியலில்  ஸ்டாலின் முத்துவுக்கு ஜோடியாக 90 களில் கலக்கிய நடிகை நிரோஷா நடித்திருக்கிறாராம் . இந்த முறை அப்பா மகன்கள்  பாசத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.  இந்த சீரியலின் ப்ரோமோ ,

தற்போது இணையத்தை கலக்கிக் கொண்டு வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் திரும்பவும் முதலில் இருந்தா என்று கூறி வருகின்றனர்.இதோ அந்த புதிய ப்ரோமோவை நீங்களே பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *