April 26, 2024

ராகவா லாரன்ஸ் கும்பிட்ட சாமியெல்லாம் கைவிடல ..!! சந்திரமுகி 2 முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா ..?? மாஸ் காட்டும் வேட்டையன் ..!!

ராகவா லாரன்ஸ் பேய் படங்களில் நடித்து பிரபலமானவர் . மேலும் பல வருடங்களாக பேய் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த ராகவா லாரன்ஸ் இயக்குனர் பி வாசு இயக்கத்தில் உருவான சந்திரமுகி 2 படத்தில் நடித்திருந்தார் . கடந்த 2005 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் தான் சந்திரமுகி 2.  இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து கங்கனா ரனாவத்,

ராதிகா, வடிவேலு ,லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, மகிமா நம்பியார் போன்ற பல நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர் . குறிப்பாக இந்த படம் வெளியாவதற்கு முன்பு  நன்றாக ஓட வேண்டும் என்று படக்குழுவினருடன் கோயில் கோயிலாக சுற்றினார் ராகவா லாரன்ஸ் .

அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் ஜெயம் ரவியின் இறைவன் , சித்தார்த்தின் சித்தா போன்ற படங்களுடன் நேற்று வெளியானது . இப்படி வெளியான திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்று தான் சொல்ல வேண்டும்.  குறிப்பாக கோயில் கோவிலாக சுற்றிய ராகவா லாரன்ஸுக்கு ,

இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்திருக்கிறது . அந்த வகையில் இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் 13 கோடியாம்.  அதோடு இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் நாலரை கோடி வசூல் செய்துள்ளதாம்.  மேலும் இறைவன் சித்தா போன்ற படங்களை ,

வசூலில் முந்தியுள்ளது சந்திரமுகி 2 திரைப்படம் . இதனால் வரும் நாட்கள் எல்லாம் தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் கண்டிப்பாக இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் படமாக அமையும் என்றும் கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *