April 28, 2024

கிருஷ்ணர் வேடத்தில் இருப்பது யாருன்னு தெரியுதா ..?? இந்த நடிகையை மறக்க முடியுமா ..?? இவர் ரசிகர்களின் கனவுக்கன்னியாச்சே ..??

மறைந்த நடிகை ஸ்ரீதேவி முன்னணி இந்திய திரைப்பட நடிகை ஆவார் . கந்தன் கருணை என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதேவி தொடர்ந்து பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார் . பின்னர் மூன்று முடிச்சு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஸ்ரீதேவி.  இந்த படத்தை தொடர்ந்து 16 வயதினிலே ,சிகப்பு ரோஜாக்கள்,

தாயில்லாமல் நான் இல்லை, ஜானி ,வறுமையின் நிறம் சிவப்பு, மூன்றாம் பிறை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து  தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . குறிப்பாக அப்போது இவர் ரஜினி மற்றும் கமலுடன் தான் அதிக படங்களில் நடித்திருந்தார் .

மேலும் நடிகை ஸ்ரீ தேவி தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் , கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் தவிர்க்க முடியாத நடிகையாக கொடி கட்டி பறந்து வந்தார்.  குறிப்பாக அப்போது இவருடைய அழகில் மயங்காத ரசிகர்களே கிடையாது என்று தான் ,

சொல்ல வேண்டும் . இதன் பிறகு போனி கபூர் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.  இப்படி இருந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு மர்மமான முறையில் இறந்து விட்டார் நடிகை ஸ்ரீதேவி . அவர் இறந்து ஐந்து வருடங்கள் ஆகியும் கூட,

அவருடைய புகழ் இன்னும் மறையவில்லை . இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவி சிறு வயதில் கிருஷ்ணர் வேடத்தில் நடித்திருந்த படத்தின் புகைப்படம் ஒன்று இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது . இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *