May 1, 2024

ஒரு நகைக்கடையே இங்க தான் இருக்கு ..!! மகளுக்கு கிலோ கணக்கில் தங்கத்தை போட்ட ராதா ..!! இணையத்தை கலக்கும் திருமண புகைப்படங்கள் ..!!

கார்த்திகா நாயர் ஓர் தமிழ் திரைப்பட நடிகை ஆவார் . 80,  90களில் தவிர்க்க முடியாத நடிகையாக கலக்கி கொண்டு வந்த நடிகை  ராதாவின் மூத்த மகளான கார்த்திகா கடந்த 2009 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஜோஸ் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.  இதன் பிறகு கடந்த 2011 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான கோ என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.

இப்படி வெளியான இவருடைய முதல் திரைப்படமே வெற்றி படமாக அமைந்தது . இதனால் கார்த்திகா தவிர்க்க முடியாத நடிகையாக கலக்குவார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.  ஆனால் அதன் பிறகு அன்னக்கொடி , புறம்போக்கு என்கிற பொதுவுடமை என்ற இரண்டு தமிழ் படங்களில்,

மட்டுமே நடித்திருந்தார் . இதன் பிறகு பட வாய்ப்பு இல்லாததால் கிட்டத்தட்ட எட்டு வருடமாக சினிமாவை விட்டு விலகி இருந்தார் நடிகை கார்த்திகா . இப்படி இருக்கும் நிலையில் 31 வயதான  நடிகை கார்த்திகா கடந்த சில தினங்களுக்கு முன்பு ரோகித் மேனன் என்பவரை ,

திருமணம் செய்து கொண்டார் . மேலும் தன்னுடைய மகளுக்கு கிலோ கணக்கில் நகைகளை போட்டு இருக்கிறார் நடிகை ராதா . இதனால் கல்யாணத்தில் மின்னும் சிலை போல் இருந்திருக்கிறார் கார்த்திகா.  தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *