April 28, 2024

பாகுபலிக்கே டப் கொடுக்கும் சூப்பர் ஸ்டார் ..!! இணையத்தை கலக்கும் ஏ ஐ புகைப்படங்கள் ..!! எவ்வளவு மாஸாக இருக்கிறார் பாருங்க ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகர்களில் ஒருவர்  தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . கிட்டத்தட்ட 48 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தில் கொடி கட்டி பறந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். அப்படி அண்மையில் இவருடைய நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் சூப்பர் ஹிட் அடித்தது .

இதைத்தொடர்ந்து அடுத்ததாக ஜெய் பீம் பட இயக்குனரான டி ஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் தலைவர் 170 என்ற படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார் ரஜினிகாந்த் . இப்படி இருக்கும் நிலையில் பாகுபலிக்கே டப்  வகையில் இருக்கும் சூப்பர் ஸ்டாரின் ,

ஏ ஐ புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது . மேலும் இதுவரை முழு நீள வரலாற்று படங்களில் நடித்திராத சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் மணிரத்னம் தான் வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.

இந் நிலையில் அதை பூர்த்தி செய்யும் வகையில் நெட்டிசன்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஏ ஐ புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர் . இதைப் பார்த்த ரசிகர்கள் நம்ம சூப்பர் ஸ்டார் பாகுபலிக்கே டப் கொடுப்பாரு போல என்று கூறி வருகின்றனர்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *