April 22, 2024

சந்திரமுகியால் தூக்கத்தையே தொலைத்த சூப்பர் ஸ்டார் ..!! இப்படியொரு அமானுஷ்ய சம்பவம் நடந்ததா ..?? பல வருடங்கள் கழித்து வெளியான அதிர்ச்சி தகவல் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2௦௦5 ஆம் ஆண்டு இயக்குனர் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சந்திரமுகி . மணிச்சித்ரதாழ் என்ற மலையாள படத்தின் ரீமேக்கான  சந்திரமுகி படத்தில் ரஜினியுடன் இணைந்து ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு ,நாசர் ,ஷீலா, விஜயகுமார் ,கே ஆர் விஜயா, வினித் போன்ற பல நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர் .

இப்படி வெளியான திரைப்படம் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல்,  800 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது . ஆனால் சந்திரமுகி படத்தால் சூப்பர் ஸ்டார் தூக்கத்தையே தொலைத்து விட்டாராம் . அந்த வகையில் இந்தப் படத்தின்,

கன்னட ரீமேக்கில் விஷ்ணுவர்தன் மற்றும் சௌந்தர்யா நடித்திருந்தார்கள்.  ஆனால் இந்த திரைப்படம் ரிலீசான பிறகு ஹெலிகாப்டர் விபத்தில் திடீரென இறந்துவிட்டார் சௌந்தர்யா.  இவரை தொடர்ந்து நடிகர் விஷ்ணுவர்தனும் மாரடைப்பால் இறந்து விட்டாராம் .

அது மட்டுமல்லாமல் சந்திரமுகி படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்துள்ளார்கள் . அப்படி அந்த படத்தை எடுக்கும்போது பல அமானுஷ்ய சம்பவங்கள் நடந்ததாக படக்குழுவினர்கள் கூறியிருக்கின்றனர் . இப்படி தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களால் சூப்பர் ஸ்டார் தூக்கத்தையே,

தொலைத்து இருக்கிறார் . இதனால் வேறு வழி இல்லாமல் சிறப்பு பூஜை ஒன்றையும் நடத்தி இருந்தாராம் ரஜினிகாந்த் . இந்த ஒரு காரணத்தினால் தான் சந்திரமுகி 2 வில் கூட  சூப்பர் ஸ்டார் நடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *