April 27, 2024

அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போகும் அதிர்ஷ்டசாலி இவர் தானா ..?? தன்னுடைய ரசிகருக்கே வாய்ப்பு கொடுத்த அஜித் ..!! அப்ப படம் சூப்பர் ஹிட் தான் ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் அஜித் குமார்.  தற்போது இவர் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் . இதையடுத்து  தன்னுடைய அடுத்த படத்தின் வாய்ப்பை தன்னுடைய ரசிகருக்கு கொடுத்திருக்கிறார் நடிகர் அஜித் . அவர் வேறு யாரும் இல்லை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமானார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் . பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் , பஹீரா,

போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்தார் . இருந்தாலும் ஒரு இயக்குனராக இவர் வெற்றி பெற்றது சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி படத்தின் மூலம் தான்.  இந்தத் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது . மேலும் அஜித்தின் தீவிர ரசிகராக,

இருந்து வரும் இயக்குனர்  ஆதிக் ரவிச்சந்திரன் ஏற்கனவே அஜித்துடன் இணைந்து நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . அது மட்டுமல்லாமல் மார்க் ஆண்டனி படத்தில் அஜித் குறித்த குறியீடுகளையும் வைத்திருந்தார் ,

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் . இந்நிலையில் நடிகர் அஜித்தின் 63வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . இதைப் பார்த்த ரசிகர்கள் அப்ப படம் சூப்பர் ஹிட் தான் என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *