April 28, 2024

சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் அஜித் ..!! வெளியான போஸ்டரை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் ..!! அப்ப தியேட்டரின் கதி ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகர்களில் ஒருவர்கள் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தல அஜித் . இதில் இவர்கள் இருவருக்கும் இடையே ஆரம்பத்தில் இருந்தே ஒரு நல்ல நட்பு இருந்து வருகிறது . அது மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் தான் பில்லா . இந்த படத்தின் ரீமேக்கில் அஜித்தை நடிக்க வையுங்கள் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் ,

இயக்குனரிடம் பரிந்துரை செய்தாராம்.  அதோடு ஒரு நிகழ்ச்சியின் போது நடிகர்களை கட்டாயப்படுத்தி தான் வரவைக்கிறார்கள் என்று தைரியமாக பேசியிருந்த அஜித்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் தான் கை தட்டி ஆதரவு கொடுத்திருந்தார்.  இப்படி இருக்கும் நிலையில்,

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலைவர் 17௦ என்ற படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார்.  நடிகர் அஜித்தும் விடா முயற்சி என்ற படத்தில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் சூப்பர் ஸ்டார் படத்தில் அஜித் வில்லனாக நடிக்க உள்ளதாக,

தகவல் வெளியாகி உள்ளது.  அந்த வகையில் சூப்பர் ஸ்டார் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் தலைவர் 171 என்ற படத்தில் இது  நடக்கும் என்று கூறப்படுகிறது.  இப்படி இருக்கும் நிலையில் சூப்பர் ஸ்டாரும் , அஜித்தும் நேருக்கு நேர் மோதுகின்ற ஏ ஐ புகைப்படம்,

ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது .இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது மட்டும் நடந்துச்சுன்னா தியேட்டர் ஸ்கிரீனே  கிழிந்து விடும் என்று கூறி வருகின்றனர்.இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *