April 28, 2024

மகளை கரைசேர்த்த நடிகை ராதா ..!! கோலாகலமாக நடந்து முடிந்த கார்த்திகாவின் திருமணம் ..!! வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே ..!!

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்து வந்தவர் நடிகை ராதா.  ஆனால் சமீப காலமாக நடிப்பதை நிறுத்திவிட்டார் நடிகை ராதா.  இதனிடையே திருமணமான ராதாவுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.  இதில் மூத்த மகள் தான் கார்த்திகா.  தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான கார்த்திகா கடந்த 2011 ஆம் ஆண்டு இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கத்தில் ,

ஜீவா நடிப்பில் வெளியான கோ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் . இப்படி வெளியான இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது . இதன்பிறகு அன்னக்கொடி , புறம்போக்கு என்கிற பொதுவுடமை போன்ற படங்களில் நடித்திருந்தார்.

மேலும் இவர் தமிழ் ,தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . ஆனால் ஒரு கட்டத்தில் இவருக்கு சுத்தமாக பட வாய்ப்பு இல்லாமல் போனது . இதனால் கிட்டத்தட்ட எட்டு வருடமாக சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்,

நடிகை கார்த்திகா . இப்படி இருக்கும் நிலையில் இன்று கார்த்திகாவுக்கு கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்திருக்கிறது . மேலும் பல சினிமா பிரபலங்கள் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தியிருந்தனர்.  தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *